நிவின் பாலியின் டைம் டிராவல், ஃபேன்டஸி  படம்
மஹாவீர்யார் படத்தில்...

நிவின் பாலியின் டைம் டிராவல், ஃபேன்டஸி படம்

நடிகர் நிவின் பாலி நடிக்கும் டைம் டிராவல், ஃபேன்டஸி கதையை கொண்ட, ’மஹாவீர்யார்’ படத்தின் டீசர் வெளியானது.

அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம், ’மஹாவீர்யார்’. இதை பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் இண்டியன் மூவி மேக்கர்ஸ் சார்பில் நிவின் பாலி, பி.எஸ் சம்னாஸ் தயாரிக்கின்றனர். நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கலாபவன் பிரஜோத் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள எழுத்தாளர் எம். முகுந்தனின் கதையை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இதில் பணியாற்றுகிறார்கள்.

மஹாவீர்யார் திரைப்படம் டைம் டிராவல், ஃபேன்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி, பொழுதுபோக்கு நிறைந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இஷான் சாப்ரா இசையமைக்க, சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.