மஹத் ராகவேந்திரா நடிக்கும் வெப் தொடர்

’ஈமோஜி’ -மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ்
’ஈமோஜி’ -மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ்

நடிகர் மஹத் ராகவேந்திரா நடிக்கும் வெப் தொடருக்கு ’ஈமோஜி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழில், மங்காத்தா, பிரியாணி, ஜில்லா உட்பட சில படங்களில் நடித்துள்ள மஹத், இப்போது ’ஈமோஜி’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். திருமணமான தம்பதி பிரிந்து செல்ல நினைக்கும்போது, அவர்களை காதல் இணைத்ததா? என்பதை மையமாகக் கொண்டு, உணர்வுபூர்வமான காதல் கதையாக இந்தத்தொடர் உருவாகியுள்ளது.

’ஈமோஜி’ மானசா
’ஈமோஜி’ மானசா

இதில், தேவிகா சதீஷ் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக மானசா நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வி.ஜே.ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரை சென்.எஸ். ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை, தென்காசி, நாகர்கோவில், ஐதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளிலும் இந்த தொடர் படமாக்கப்பட்டுள்ளது. ஆர்.ஹெச். விக்ரம்இசை அமைத்துள்ளார்.

இருவர் ஒன்றானால், பொற்காலம் படங்களை தயாரித்த ஏ.எம். சம்பத் இந்த தொடரை தயாரித்துள்ளார். இத்தொடர், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in