‘இது தவறு’ - மடோனாவுக்கு இன்ஸ்டாகிராம் திடீர் தடை!

‘இது தவறு’ - மடோனாவுக்கு இன்ஸ்டாகிராம் திடீர் தடை!

பிரபல பாப் பாடகியும் நடிகையுமான மடோனா, ‘இன்ஸ்டாகிராம் லைவ்’ வழியே நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அதற்காகவே ஏராளமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களைத் திக்குமுக்காட வைப்பார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ‘இன்ஸ்டாகிராம் லைவ்’ நிகழ்ச்சியில் தோன்றிய அவர் நிர்வாணப் படங்களை வெளியிட்டார்.

ANGELA WEISS

மடோனாவின் இந்தச் செயலை இன்ஸ்டாகிராம் நிர்வாகம் கண்டித்தது. இதையடுத்து நேற்று நேரலையில் தோன்ற முயன்றவருக்கு அதிர்ச்சி கொடுத்தது இன்ஸ்டா. சமூக வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறி அவர் தொடர்ந்து லைவ் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்துள்ளது. அதோடு மற்றவர்களை மதிக்க வேண்டும் என்றும் சட்டவிதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி வீடியோவில் பேசிய மடோனா, ‘லைவ் நிகழ்ச்சியிலிருந்து தடுக்கப்பட்டுள்ளேன். நான் என் வாழ்நாளில் இவ்வளவு ஆடைகளை ஒரு போதும் அணிந்ததில்லை. இப்போது பேச்சற்றவளாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in