`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

சர்ச்சைக்குள்ளான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் குறித்து `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் வரிச்சலுகை அளித்துள்ளன. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த படத்தை பார்த்து வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேநேரத்தில் இந்த படத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தின் பொதுப்பணித் துறையின் துணைச் செயலாளராக இருக்கும் ஐஏஎஸ் நியாஸ் கான் என்பவர் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பாளர்களை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்தியாவில் பல மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதை திரைப்படமாக எடுக்க வேண்டும். இந்த சிறுபான்மை சமூகம் பூச்சிகள் அல்ல. அவர்களும் நாட்டின் குடிமக்கள்" என கூறியிருந்தார். இந்த கருத்து அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, "கானின் பதிவுகளை பார்த்தேன். இது ஒரு தீவிரமான பிரச்சினை. அவர் அரசு அதிகாரிகளுக்கான வரம்பை மீறியுள்ளார். மாநில அரசு அவருக்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரின் கருத்துக்கான காரணங்களை கேட்கும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in