தேசிய நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய மாதவன் மகன்

சஜன், வேதாந்த், நடிகர் மாதவன்
சஜன், வேதாந்த், நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் மகன் வேதாந்த், டேனிஷ் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

நடிகர் மாதவன் மகன் வேதாந்த், சிறுவயது முதலே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டிகளில் 7 பதக்கங்களை வென்று அசத்தினார். கடந்த வருடம் மார்ச் மாதம் நடந்த லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று வேதாந்த் வெண்கலம் வென்றார்.

மாதவன், வேதாந்த்
மாதவன், வேதாந்த்

இந்நிலையில், இப்போது டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இதில், கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கம் வென்றார். வேதாந்த் 1500 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வெற்றியை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன், பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in