20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன்- மீரா ஜாஸ்மின் ஜோடி!

உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீராஜாஸ்மின்
மீராஜாஸ்மின்20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன் - மீராஜாஸ்மின் ஜோடி!

’டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் மாதவன், சித்தார்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக மாறி இயக்கிவரும் ’டெஸ்ட்’ படத்தில், முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகர்களாக மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளதாக பட குழுவினர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

தனது துறுத்துறு நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளம் வந்தவர். கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் தன் துறுதுறு நடிப்பு மற்றும் குறுகுறு பார்வையின் மூலம் பிரபலமானார். மேலும் மாதவன் – மீரா ஜாஸ்மின் பெரிதாக ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஜோடியாகவும், கொண்டாடப்பட்ட ஜோடியாகவும் மாறியது.

இப்படி முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால், அடுத்ததாக விஜய் உடன் 'புதிய கீதை', அஜித்துடன் 'ஆஞ்சநேயா' ஆகிய படங்களில் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்தார். ஆனால் இவ்விரு படங்களும் அவருக்கு தோல்வி படங்களாக அமைந்தன. அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `ஆயுத எழுத்து' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் மாதவனுடன் திரையில் மீரா ஜாஸ்மின் தோன்ற உள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in