
நடிகர் தனுஷ் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாகத் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, ட்விட்டர் தளத்தின் புதிய வசதியைப் பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். ட்விட்டரின் புதிய வசதியான ட்விட்டர் அன்லாக் (Twitter Unlock ) மூலம், நடிகர் தனுஷின் தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக ‘மாறன்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும், அதன் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்திலும் வெளியிடப்பட்டிருக்கும் மாறன் டிரெய்லருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்துவருகின்றனர்.
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், மார்ச் 11-ல் வெளியாகிறது.