`மாமன்னன்’ 50வது நாள் விழா... உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

‘என்னுடைய சினிமா பயணத்தின் கடைசி மேடையாக இருக்கும்’ என்று நடிகரும் , தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த `மாமன்னன்’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சாதி வேறுபாட்டை பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியிருந்தது. சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக இந்த படத்தில் வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் மக்களுக்காக போராடும் இளைஞர்களின் வேடத்தில் நடித்தனர். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுகளை பெற்றது.

‘மாமன்னன்’ திரைப்படம் ஜூன் மாதம் 29ம் தேதியன்று திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதேபோல இந்திய அளவில் மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டிருந்தார்கள்.

வடிவேலுவுக்கு நன்றி சொன்ன ‘மாமன்னன்’ படக்குழு!
வடிவேலுவுக்கு நன்றி சொன்ன ‘மாமன்னன்’ படக்குழு!

இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு, உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து, இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடி டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது “மாமன்னன்” திரைப்படம். அது மட்டுமன்றி, நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 ட்ரெண்டிங்கில் உள்ள ஒரே இந்தியப்படமும், தமிழ் படமும் ‘மாமன்னன்’ படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை திரையரங்குகளில் 55 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. படம் இன்னமும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இப்படம் ரிலீஸாகி ஓரிரு நாளிலேயே சகசஸ் மீட் வைத்திருந்தனர். அப்போது பேசிய உதயநிதி “இது விரைவில் நடத்தப்பட்ட விழானு சொன்னீங்க. கண்டிப்பா 50ஆவது நாள் விழா வச்சு எல்லாருக்கும் ஷீல்ட் தருவோம். நான் இது தான் என்னுடைய கடைசி சினிமா மேடைனு நினைச்சேன். கண்டிப்பா 50வது நாள் நிகழ்ச்சி உண்டு.” என்று கூறினார். அவர் சொன்னபடி இன்று 50வது நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in