பாடலாசிரியர் லலிதானந்த் மாரடைப்பால் மரணம்

லலிதானந்த்
லலிதானந்த்

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் லலிதானந்த் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 47.

துறையூர் அருகிலுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் லலிதானந்த். நா.முத்துக்குமாரின் நண்பரான இவர், சினிமாவில் பாடல் எழுதி வந்தார். ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ’என் வீட்டுல நான் இருந்தேனே’ என்ற பாடலை எழுதியுள்ளார். மேலும் 'காஷ்மோரா’, 'ஜுங்கா' உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்னை காரணமாக அடையாறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். டயாலிசிஸ் சிகிச்சையும் பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் உடல்நிலை மிகவும் மோசமானது. இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.

மறைந்த லலிதானந்துக்கு மனைவி மற்றும் மகனும் மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in