லைகா புரொடக்சன்ஸை மிரட்டும் இ-மெயில்கள்: யார் இந்த என்பிகே நரேந்திரமாரி?

லைகா புரொடக்சன்ஸை மிரட்டும் இ-மெயில்கள்: யார் இந்த என்பிகே நரேந்திரமாரி?

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

பல முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்துள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் தற்போது பொன்னியின் செல்வன், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நீல்காந்த் நாராயண்கபூர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், என்.பி.கே நரேந்திரமாரி என்ற பெயரில் கடந்த ஜூலை மாதத்தில் 26-க்கும் மேற்பட்ட இ-மெயில்கள் அனுப்பி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பணம் பறிக்கும் முயற்சியில் எங்கள் நிறுவனத்துக்கு தொடர்பு இல்லாத தகவல்களுடன் இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பல வணிக சம்பந்தமான மற்றும் வங்கிக் கணக்குகள், செல்போன் நம்பர்கள் பலரைப் பற்றிய தகவல்கள் அடங்கிய இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தங்கள் பெயரை கெடுக்கும் வகையில் பல்வேறு இ-மெயில் முகவரிகளுக்கும் இது போன்ற தகவல்களை பரப்பி அவதூறு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம்" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in