‘துணிவு’ படத்தின் உரிமையை வாங்கியது லைகா நிறுவனம்: புதிய அப்டேட்!

‘துணிவு’ படத்தின் உரிமையை வாங்கியது லைகா நிறுவனம்: புதிய அப்டேட்!

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு' படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமம் எனப்படும் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடித்துள்ள அஜித்குமார் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் தங்களின் டப்பிங் பணிகளை நிறைவுசெய்துள்ளனர். படத்தில் முதல் சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாங்காங் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், பொங்கல் ரிலீஸிற்கு இப்படம் தயாராக உள்ளது. ‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in