சிம்புவுக்கு சொகுசு கார் - கௌதமுக்கு புல்லட்: ‘வெந்து தணிந்தது காடு’ தயாரிப்பாளரின் வெற்றிப் பரிசு!

சிம்புவுக்கு சொகுசு கார் - கௌதமுக்கு புல்லட்: ‘வெந்து தணிந்தது காடு’ தயாரிப்பாளரின் வெற்றிப் பரிசு!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் கௌதம் மேனனுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார்.

சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வசூல் ரீதியிலும் வெற்றிபெற்றுள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தின் வெற்றியை நேற்று படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்புவுக்கு உயர்ந்த ரக 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு காரினை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார். அதேபோல இயக்குநர் கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்டு புல்லட்டை பரிசாக வழங்கினார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in