இவரை பின் தொடரும் 1.67 லட்சம் பாலோயர்கள்: திடீரென கைதான டூப்ளிகேட் சல்மான் கான்

இவரை பின் தொடரும் 1.67 லட்சம் பாலோயர்கள்: திடீரென கைதான டூப்ளிகேட் சல்மான் கான்

சாலையில் நடனம் ஆடி வீடியோ எடுத்த டூப்ளிகேட் சல்மான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர், அஜாம் அன்சாரி. பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகரான இவர், அவரைப் போல சாயல் கொண்டவர். சல்மான் கானின் பாடல்களுக்கு சாலைகளில் நடனம் ஆடி, அந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். இதனாலேயே பிரபலமானவர் இவர். இவருடைய இன்ஸ்டாகிராமில் 1.67 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு லக்னோவின் புகழ்பெற்ற மணிக்கூண்டு அருகே சாலையில் நின்று சல்மான் பாடலுக்கு சட்டையில்லாமல் ஆடியபடி வீடியோ எடுத்தார். அப்போது அங்கு ஏராளமானோர் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர், டூப்ளிகேட் சல்மான் கான் மீது, தங்குர்கன்ச் போலீஸில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார், அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிவு அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.