'பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸமை எனக்குப் பிடிக்கும்': நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

'பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸமை  எனக்குப் பிடிக்கும்':  நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேரலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கமெண்ட்ரி செய்தார். அப்போது இந்திய வீரர்கள் அல்லாத வீரர்களில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸமைப் பிடிக்கும் என்று கூறினார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இந்நிலையில், இன்று இந்தப் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நடிகர் சிவகார்த்தியேகன் சிறப்பு கமெண்ட்ரி செய்தார். 'ப்ரின்ஸ்' படத்திற்கு விளம்பரத்தின் ஒருபகுதியாக இந்த கமெண்ட்ரி நடைபெற்றது. அப்போது ஆர்ஜே பாலாஜி, " உங்களுக்கு இந்திய வீரர்கள் அல்லாமல் வேறு எந்த நாட்டு வீரரைப் பிடிக்கும்?" என்று கேட்டார். அதற்கு "’எனக்கு பாபர் ஆஸம் பிடிக்கும்" என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். அவர் சொல்லி முடிக்கும் முன், பாபர் ஆஸம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159 ரன்களை எடுத்தது. இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in