'லவ் யூ கமல் சார்’: பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை

'லவ் யூ கமல் சார்’: பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு 'ஐ லவ் யூ சார்' என நடிகை குஷ்பு ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, நடிகர் கமல்ஹாசனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், " என் அன்பு நண்பரே, இன்று உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடும் போது, உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் பெருக வாழ்த்துக்கள். நான், நமது மரியாதை மற்றும் அன்பின் நட்பைக் கொண்டாடுகிறேன். லவ் யூ சார்’’என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் #HappyBirthdayKamalHaasan #Ulaganayagan என்ற ஹேஷ்டேக்குகளையும் தனது ட்விட்டர் தளத்தில் குஷ்பு பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனுடன் 'மைக்கேல் மதன காமராஜன்', 'சிங்காரவேலன்', 'வெற்றிவிழா' உள்பட பல படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்மையில் 'விக்ரம்' படம் வெளியான போது, நடிகர் கமல்ஹாசன் தோள்மீது சாய்ந்தவாறு இருக்கும் புகைப்படங்களை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில், ‘’மை ஹீரோ.. மை பிரெண்ட்.. மை விக்ரம்’’என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in