இந்தியில் ரீமேக்காகும் `லவ் டுடே’!

இந்தியில் ரீமேக்காகும் `லவ் டுடே’!

‘லவ் டுடே’ திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக்காகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நிகிதா, ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியானத் திரைப்படம் ‘லவ் டுடே’. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது ’லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கிறார். ’லவ் டுடே’ படத்தின் இந்தி உரிமத்தை போனி கபூர் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த வருட கடைசியில் சின்ன பட்ஜெட்டில் தயாராகி வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘அப்பா லாக்’ என்ற பெயரில் பிரதீப் ரங்கநாதன் எடுத்த குறும்படத்தின் சினிமா வடிவம்தான் ‘லவ் டுடே’. இந்தப் படத்தை அடுத்து லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தை இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in