இனி தப்ப முடியாது; நடிகை மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: போலீஸ் அடுத்த கட்ட நடவடிக்கை

இனி தப்ப முடியாது; நடிகை மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: போலீஸ் அடுத்த கட்ட நடவடிக்கை

தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகை மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மீரா மிதுன் தலைமறைவானார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து நடிகை மீரா மீதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் முதன்மை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

கடந்த இரண்டு மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாளை லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மீரா மிதுனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் சியமாளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in