அருண்விஜய் படத்திற்காக 3.5 கோடி செலவில் லண்டன் சிறைச்சாலை செட்

அருண்விஜய் படத்திற்காக 3.5 கோடி செலவில் லண்டன் சிறைச்சாலை செட்

நடிகர் அருண்விஜய் தற்போது நடித்து வரக்கூடிய ‘அச்சம் என்பது இல்லையே’ படத்திற்காக பிரம்மாண்டமான லண்டன் சிறையை செட்டாக அமைத்திருக்கிறார்கள்.

’தலைவி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விஜய் தற்போது அருண்விஜய், எமி ஜாக்சனுடன் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்திற்காக இணைந்திருக்கிறார்.

சமீபத்தில், லண்டனில் முதற் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.

இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு படுகாயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார். எமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். மலையாளத்தில் பிரபல நடிகையான நிமிஷா விஜயன் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in