தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன்?

ரஜினி லோகேஷ் இணையும் ’தலைவர் 171’
ரஜினி லோகேஷ் இணையும் ’தலைவர் 171’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171வது படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் முயற்சியாக, லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் உடன் அடுத்த படத்தில் இணைய உள்ளார். தலைவர் 171 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம், எல்.சி.யு எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் திரைப்படங்களில் ஒன்று அல்ல எனவும் வேறு கதை எனவும் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இருப்பினும் இதிலும் பிரபல முன்னணி ஹீரோக்கள் பலர் நடிப்பது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்ற நிலையில், இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்திலிருந்து ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது.

குறிப்பாக ரஜினியின் மகனாக நடிகர் வசந்த் ரவி நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வதந்திகள் பரவியது. சூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் ஜெயிலர் பட நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாக பரவியது. ஆனால் அந்த புகைப்படங்கள் தனிப்பட்ட முறையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை என்ற தகவல் பின்னர் வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ வெளியாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in