
’ஜெயிலர்’ வெற்றியும், வசூலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சத்தமில்லாமல் பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
’லியோ’ பட வேலைகளை முடித்து விட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இதற்கிடையில் அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வாங்கி இருக்கிறார். புது கார் வாங்கிய போது லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காரின் மதிப்பு 1.70 கோடி எனவும் சொல்லப்படுகிறது.
புது கார் வாங்கிய லோகேஷ் கனகராஜுக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் 65 லட்ச ரூபாய் மதிப்பிலான லெக்ஸஸ் ES 300 செடன் காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெயிலர்’ படம் 500 கோடிகளைத் தாண்டுமா? 1000 கோடி வசூலைத் தொடுமா என்கிற ஆருடங்கள் கூறப்படுகிற நிலையில், திரைத்துறையினர் பலரும் விஜயின் ‘லியோ’ படம் ‘ஜெயிலர்’ படத்தின் வியாபாரத்தைத் தாண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், பட ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் இயக்குநர் லோகேஷ் பி.எம்.டபிள்யூ கார் வாங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.