விஜய்யை அடுத்து ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்விஜய்யை அடுத்து ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

நடிகர் விஜய்யை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை இயக்க வாய்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இதன் காஷ்மீர் ஷெட்யூல் முடிவடைந்து, சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. திட்டமிட்டபடி படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ‘லியோ’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை இயக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க இருக்கிறது எனவும், அதற்கு பிறகே இது குறித்து உறுதியாக சொல்ல முடியும் எனவும் சொல்லப்படுகிறது.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170-வது படத்தை முடித்த பின்பு லோகேஷ் இயக்கத்தில் நடிக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே, லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் நடிகர் ரஜினியை இயக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in