`பொன்னியின் செல்வன்’ நடிகருக்கு கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்!

`பொன்னியின் செல்வன்’ நடிகருக்கு கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ‘ஜெயம்’ ரவிக்கு கதை சொல்லி இருக்கிறார்.

’விக்ரம்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’, ‘விக்ரம்2’, ‘கைதி2’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் நடிகர் ‘ஜெயம்’ ரவிக்கு சமீபத்தில் கதை சொல்லி இருக்கிறார். ஆக்‌ஷன் திரைக்கதையான இது தனக்கு பிடித்திருந்தது என நடிகர் ரவி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜே ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறாரா அல்லது இந்தக் கதையை வேறு யாரேனும் இவரது திரைக்கதையில் இயக்குகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 67’ படத்தை இயக்கி வருகிறார். கேங்க்ஸ்டர் ட்ராமாவாக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் 50 வயது நபராக விஜய் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கின்றனர். விரைவில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in