சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திடீர் அறிவிப்பு

சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திடீர் அறிவிப்பு

சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

'மாநகரம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து கார்த்தி நடித்த ’கைதி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மெகா ஹிட்டானது. இதையடுத்து, கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த ’விக்ரம்’ படத்தை இயக்கினார்.

இதில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா உட்பட பலர் நடித்தனர். இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்தது. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்க இருக்கிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். ‘’அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் திரும்பி வருவேன்’’ என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். விஜய் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்க அவர் முடிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in