`17-வது பிறந்த நாள் கேக்கை அங்குதான் வெட்டினேன்’: பழைய `விக்ரம்’ ஹீரோயின் நெகிழ்ச்சி

`17-வது பிறந்த நாள் கேக்கை அங்குதான் வெட்டினேன்’: பழைய `விக்ரம்’ ஹீரோயின் நெகிழ்ச்சி

கமல்ஹாசன் நடிப்பில் 1986-ம் ஆண்டு வெளி வந்த படம் ’விக்ரம்’. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இப்போது இதே டைட்டில் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்பட பலர் நடிக்கின்றனர்.

கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில், கமல்ஹாசன் பாடியுள்ள 'பத்தல பத்தல' என்ற பாடல், சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடக்கிறது.

பழசும் புதுசும்
பழசும் புதுசும்

இதற்கிடையே 1986-ம் ஆண்டு வெளியான கமலின் ’விக்ரம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் லிஸி. அவர் கமலுடன் அப்போது எடுத்தப் படத்தையும் இப்போது எடுத்தப் படத்தையும் ஃ பேஸ்புக்கில் போஸ்ட் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ’விக்ரம்’ என்ற பெயரில் மீண்டும் ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார், கமல் சார். முதல் படத்தின் கதையில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமானது. ஒரிஜினல் விக்ரம் படத்தின் ஹீரோயின்களுள் நானும் ஒருத்தி! இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமளித்தாலும் எங்களுடைய, லிஸி லஷ்மி ஸ்டூடியோவில் படத்தின் குரல் பதிவு நடந்ததில் பெருமை கொள்கிறேன்.

Picasa

பழைய ’விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் என்னவொரு அனுபவம்? என் 17-வது பிறந்த நாள் கேக்கை அந்தக் குழுவுடன்தான் சேர்ந்து வெட்டினேன். இந்தியாவின் முதல் பாண்ட் படமான இதன் ஷூட்டிங் ராஜஸ்தானில் நடந்தது. இந்தியாவின் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவருடன் (தயாரிப்பாளரும் அவர்தான்) நடித்தேன். அதில் கிரேக்க கடவுளைப் போல நடிகை டிம்பிள் இருந்தார். நான் பங்கேற்ற மிகப் பெரிய படக்குழு அது. 17 வயது பள்ளிச் சிறுமியான எனக்கு முதலில் பயமாக இருந்தாலும் பிறகு உற்சாகத்தையும் மேஜிக்கையும் கொடுத்தது. என் இனிய நினைவுகளில் இதுவும் ஒன்று. கமல், லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழுவுக்கு வாழ்த்துகள். இவ்வாறு நடிகை லிஸி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.