லிங்குசாமியின் ’வாரியர்’ இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடி!

லிங்குசாமியின் ’வாரியர்’ இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடி!

விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். இவர், தெலுங்கில் ‘உப்பெனா’, ‘ஷியாம் சிங்கா ராய்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆதி, அக்‌ஷரா கவுடா உட்பட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

’த வாரியர்’ ராம் பொத்தினேனி
’த வாரியர்’ ராம் பொத்தினேனி

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்துக்கு ’த வாரியர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ராம், முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

’த வாரியர்’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் லிங்குசாமி இந்தப் படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு படம் ஒன்றின் டப்பிங் உரிமை இவ்வளவு கோடிக்கு விற்கப்படுவது இதுதான் முதன்முறை என்கிறார்கள்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த ’புஷ்பா’ படம் இந்தியிலும் சூப்பர் ஹிட்டானதால், தென்னிந்திய படங்களின் டப்பிங் உரிமைக்கும் இப்போது அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in