வரம்பு மீறும் ஊடகங்கள்... அதிரடி அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா...

பாரதிராஜா
பாரதிராஜா

பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் வீடியோ எடுக்க காவல் துறையினரிடம் ஊடகங்கள் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது யூடியூப் முதல் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் வீடியோ எடுத்தன.

பாரதிராஜா அறிக்கை
பாரதிராஜா அறிக்கை

இந்நிலையில் மூத்த இயக்குனரும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனிமேல் திரையுலக பிரபலங்களின் துக்க நிகழ்வில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லை என்றும், சில மீடியாக்கள் ஊடக தர்மத்தை மீறி நடந்துக் கொள்வதாலேயே, இப்படிப்பட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் அவர் காவல்துறையினரிடம் முன் வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in