பாலியல் வழக்கில் சிக்கிய இயக்குநருக்கு எதிராக பெண்கள் அமைப்பு

கேரள திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க கோரிக்கை
பாலியல் வழக்கில் சிக்கிய இயக்குநருக்கு எதிராக பெண்கள் அமைப்பு
கீது மோகன் தாஸ், பார்வதி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இயக்குநருக்கு, வழக்கு முடியும்வரை தடை விதிக்க வேண்டும் என்று கேரள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

நிவின் பாலி நடித்து வரும் மலையாளப் படம், ’படவேட்டு’. இதை நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். மஞ்சு வாரியர், அதிதி பாலன், ஷம்மி திலகன் உள்பட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் லிஜு கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்நிலையில், லிஜு கிருஷ்ணா, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

லிஜு கிருஷ்ணா
லிஜு கிருஷ்ணா

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த கண்ணூர் பகுதிக்கு சென்ற போலீஸார், லிஜு கிருஷ்ணாவிடம் இதுபற்றி விசாரித்தனர். பின்னர் கைது செய்தனர். இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நடிகைகள் பார்வதி, கீது மோகன்ஸ்தாஸ், ரீமா கல்லிங்கல், ரேவதி உள்பட பலர் பங்கேற்றுள்ள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு (Women in Cinema Collective), வழக்கு முடியும்வரை கேரள திரைத்துறையில் பணியாற்ற லிஜூ கிருஷ்ணாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

அதோடு பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைக்கு எதிரான போஷ் (POSH) சட்டத்தை திரைத்துறையில் அமல்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அந்தக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in