தன்பாலின முத்தம்: அனிமேஷன் படத்துக்கு 14 நாடுகள் திடீர் தடை!

தன்பாலின முத்தம்: அனிமேஷன் படத்துக்கு 14 நாடுகள் திடீர் தடை!

டிஸ்னியின் 'லைட்இயர்' என்ற அனிமேஷன் திரைப்படத்துக்கு 14 நாடுகள் தடை விதித்துள்ளன.

டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து 'டாய் ஸ்டோரி’ வரிசை அனிமேஷன் திரைப்படங்களைத் தயாரித்தது. இந்தப் படங்கள், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படங்களில் இடம்பெற்ற பஸ் லைட்இயர் (Buzz Lightyear )என்ற கேரக்டர் உலகமெங்கும் பிரபலமானது. இப்போது இந்த கேரக்டரை மையமாக வைத்து, 'லைட் இயர்' என்ற ஆக்‌ஷன் அட்வெஞ்சர் அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கஸ் மேக்லேன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஹீரோ கேரக்டருக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் இவான்ஸ் குரல் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில், இரண்டு பெண் கேரக்டர்கள் திருமணம் செய்து வாழ்வது போலவும் இருவருக்கும் முத்தக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தன்பாலின முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் நாட்டின் உள்ளடக்க தர நிலைகளை மீறுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டில் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. சவுதி அரேபியா, எகிப்து, மலேசியா, லெபனான், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தப் படத்திற்கு தடை விதித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் தன்பாலின சேர்க்கைக் குற்றமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in