‘லைஃப்டைம் செட்டில்மென்ட் ஆண்டவரே’: கமலின் கடிதத்தால் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!

‘லைஃப்டைம் செட்டில்மென்ட் ஆண்டவரே’:  கமலின் கடிதத்தால் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ' இது லைஃப்டைம் செட்டில்மென்ட்' என்று நெகிழ்ந்துள்ளார்.

நடிகர்கள் கமல், சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் ஜூன் 3-ம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ' இது வாழ்நாளுக்கான செட்டில்மென்ட் கடிதம். இந்த கடிதத்தைப் படித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை, நன்றி ஆண்டவரே' என தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட கமல் எழுதிய கடிதத்தில், "என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராக இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூடிப்பைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துகள். உங்கள் அன்ன பத்திரம் என்றும் நிறைந்திருக்கும் " என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in