`உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே'- ஏ.ஆர்.ரஹ்மான்

`உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே'- ஏ.ஆர்.ரஹ்மான்

அஜ்மீர் தர்காவில் மனைவியுடன் சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை செய்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அஜ்மீர் தர்கா. இந்த தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி செல்வதுண்டு. அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது மனைவி சாய்ரா பானுவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in