`பீஸ்ட்' படத்துக்கு தடை விதியுங்கள்; இல்லன்னா அசாதாரண சூழல் ஏற்படும்'

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சென்ற கடிதம்
`பீஸ்ட்' படத்துக்கு தடை விதியுங்கள்; இல்லன்னா அசாதாரண சூழல் ஏற்படும்'

விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' படத்துக்கு தடை விதிக்கக் கோாி மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் `பீஸ்ட்'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் நடிகர் விஜய், காவி துணியை கிழிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இது பாஜகவை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டனர். இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வந்தனர்.

இதனிடையே, தீவிரவாத காட்சிகள் இருப்பதாக கூறி `பீஸ்ட்' படத்துக்கு குவைத் அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை குவைத்தில் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், `பீஸ்ட்' படத்துக்கு தடை விதிக்கக் கோாி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கடிதம் எழுதியுள்ளார். அதில், "இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக கூறி குவைத் அரசு `பீஸ்ட்' படத்துக்கு தடை விதித்துள்ளது. இதனால் வரும் 13‍-ம் தேதி `பீஸ்ட்' படம் வெளியானால் அசாதாரண சூழல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.