
‘லியோ’ படப்பிடிப்பில் இருந்து நடிகர் சஞ்சய்தத்துக்கு விடை கொடுத்திருக்கிறது படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வரக்கூடிய நிலையில் கடந்த வாரத்தில் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படப்பிடிப்பில் இணைந்தார்.
ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில், சஞ்சய் தத்திற்கான காஷ்மீர் ஷெட்யூல் முடிவடைந்துள்ளதைப் படக்குழு தெரிவித்து இருக்கிறது. அவருடன் இருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘நீங்கள் மிகவும் அன்பானவராகவும், எளிதில் பழக்கக்கூடிய ஒருத்தராகவும் இருந்தீர்கள். உங்கள் நடிப்பை நாங்கள் அருகில் இருந்து பார்த்ததில் மகிழ்ச்சி. விரைவில், சென்னையில் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார். அன்புடன் டீம் ’லியோ’’ என அந்த ட்விட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் ‘லியோ’ படக்குழு காஷ்மீர் ஷெட்யூலை முடித்து விட்டு விரைவில் சென்னை திரும்ப இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.