`லட்சியம் சிறப்பாக அமையட்டும்'- நடிகை அதுல்யாவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

`லட்சியம் சிறப்பாக அமையட்டும்'- நடிகை அதுல்யாவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

"தமிழ் வருட பிறப்பில் லட்சியம், ஆசைகள், கனவுகள், நல்ல உடல்நலம், மகிழ்ச்சியுடன் நினைத்தது அனைத்தும் நிறைவேறி சீரும் சிறப்புமாக அமைந்திட வேண்டும்" என்று நடிகை அதுல்யா ரவி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த நடிகை அதுல்வா ரவி, 2017-ம் ஆண்டு `காதல் கண் கட்டுதே' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, 2018ல் வெளியான ஏமாலி, 2019ல் வெளியான நாடோடிகள்2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை அதுல்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் வருட பிறப்பில் லட்சியம், ஆசைகள், கனவுகள், நல்ல உடல்நலம், மகிழ்ச்சியுடன் நினைத்தது அனைத்தும் நிறைவேறி சீரும் சிறப்புமாக அமைந்திட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். "நல்லதே நடக்கும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.