ரெட் ஜெயன்ட் மூவீஸ் ’லியோ’ திரைப்படத்தை வெளியிட்டு இருந்தால் இந்த தொல்லை அவர்களுக்கு வந்திருக்காது என்றும் திரைப்படத் துறையில் சர்வாதிகாரத்தைக் கோலோச்சுகின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகள் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. நடிகர் விஜய்க்கு தேவையில்லாமல் அரசு நெருக்கடி கொடுக்கிறது என சீமான் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அதாவது கடந்த பத்து வருடங்களில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இருபது, முப்பது படங்களைத்தான் வெளியிட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டிருக்கிறது.
திரைப்பட கலைஞர்களைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி திரைப்படம் எடுக்கவிடாமல் செய்கிறார்கள். அப்படி திரைப்படம் எடுத்தாலும் தங்களிடம்தான் கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர். முழுக்க முழுக்க திரைப்படத் துறையில் சர்வாதிகாரத்தைக் கோலோச்சுகின்றனர்.
திமுக ஆட்சியில்தான் இவ்வாறு நடக்கிறது. எங்களுடைய ஆட்சிக்கும், அவர்களுடைய ஆட்சிக்கும் இருக்கும் வித்தியாசத்தை திரைத்துறையினர் உணர வேண்டும். ஆனால், அவர்கள் மெளனம் சாதிப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. திரைத்துறையினர் இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். லியோ படம் தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றனர். என்ன நடக்கின்றதென்று பார்ப்போம்’’ என்றார்
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்
பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!
தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!