விஷூவல் ட்ரீட்டாக அமையும் ‘லியோ’ - ஒளிப்பதிவாளர் கொடுத்த அப்டேட்!

லியோ விஜய்
லியோ விஜய்விஷூவல் ட்ரீட்டாக அமையும் ‘லியோ’- ஒளிப்பதிவாளர் கொடுத்த அப்டேட்!

‘லியோ’ படம் குறித்து அதன் ஒளிப்பதிவாளர் கொடுத்த அப்டேட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வரக்கூடிய ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. ’நண்பன்’, ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ‘லியோ’ படத்தில் விஜயுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். இந்தப் படத்தில் V RAPTOR XL கேமராவை பயன்படுத்தி சில போர்ஷன்களை படம் பிடிப்பதாக மனோஜ் பரமஹம்சா வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற மல்டி ஃபார்மட் கேமராவை தமிழ் சினிமாவில் உபயோகிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது, இரண்டு ரேப்டர்கள் மற்றும் பேபி கமோடாவையும் மனோஜ் பரமஹம்சா பயன்படுத்தியுள்ளார். மிஷ்கின் மற்றும் கெளதம் மேனன் போர்ஷன்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், ‘லியோ’ டீம் மார்ச் மாத இறுதிக்குள் காஷ்மீர் ஷெட்யூலை முடித்து விட்டு சென்னை திரும்ப இருக்கிறார்கள். கேங்க்ஸ்டர் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தத் திரைப்படம், இந்த வருடம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in