போலீஸார் அனுமதியின்றி சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் குவிந்த விஜய் ரசிகர்களால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘லியோ’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. வழக்கமாக, விஜய் படத்தின் டிரெய்லர் இதுபோன்று வெளியாகும் போது, சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் பிரம்மாண்ட திரைகட்டி அதில் திரையிடப்படும்.
இதற்கான அனுமதி காவல்துறையினரிடம் வாங்கிய பின்புதான் திரையிடுவார்கள். அந்த வகையில் ’லியோ’ படத்தின் டிரெய்லரை திரையிட அனுமதி கோரிய போது அதற்கு கோயம்பேடு போலீஸார் அனுமதி தர மறுத்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பொதுவெளியில் ‘லியோ’ டிரெய்லரை திரையிட அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், தற்போது போலீஸாரின் அனுமதியின்றி ரோகிணி திரையரங்கில் ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளதால் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!