Leo Success Meet: வெற்றி விழாவுக்கு தயாரான மேடை... குட்டி கதை சொல்லி ரஜினிக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்?

நடிகர் விஜய்
நடிகர் விஜய் Gajan
Updated on
1 min read

விஜய்யின் ‘லியோ' படத்தின் இசை வெளியீட்டு இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில் விஜய் சொல்லப் போகும் குட்டி ஸ்டோரி குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதிக அளவிலான போலி டிக்கெட்டுகள் விற்பனை, ரசிகர்கள் கூட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு படக்குழு நிகழ்ச்சியை ரத்து செய்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால், தற்போது படத்தின் வெற்றி விழாவுக்காக மீண்டும் ரத்தான இடத்திலேயே வெற்றி விழாவை படக்குழு கொண்டாடுகிறது. பேருந்துகளுக்கு அனுமதி இல்லை, என்ட்ரி பாஸூடன் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என ஏராளமான கட்டுப்பாடுகளை நிகழ்வுக்கு விதித்துள்ளது காவல்துறை.

இதில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன் என ‘லியோ’வின் மொத்த படக்குழுவும் ஒன்று கூட உள்ளது. மேலும், ‘லியோ’ என பெயர் பொறித்த தங்க நாணயமும் படக்குழுவில் வேலை பார்த்தவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுக்க உள்ளது. இசை வெளியீட்டு விழா நிகழ்விலேயே ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி கிளப்பிய சூப்பர் ஸ்டார் சர்ச்சையையும் ‘காகம்-கழுகு’ குட்டி கதைக்கு பதிலடியாகவும் விஜய் குட்டி கதை சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அந்த வகையில், இன்று ரஜினிக்கு விஜய் பதிலடியாக என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என ரசிகர்கள் கொட்டும் மழையிலும் நேரு ஸ்டேடியம் வாசல் முன்பு கூட்டமாக குவிந்துள்ளனர். மேலும், ‘ஜெயிலர்’ படத்தின் மொத்த வசூலான 510 கோடி ரூபாயை ’லியோ’ முந்தியுள்ளதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in