விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவை வரும் நம்பவர் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை வெளியிட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டதால் இந்த வெற்றிவிழாவை கொண்டாட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது. அதில் படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்களுக்கு ஸ்வீட் பரிசு ஒன்றை வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதாவது படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னிஷியன்களுக்கும் தங்க நாணயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ’LEO' என பொறிக்கப்பட்ட தங்க நாணயம் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெற்றி விழா நடத்த தயாரிப்பு குழுவினர் அனுமதி கேட்டு காவல் துறையிடம் மனு அளித்திருந்தது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து சில தகவல்களை காவல்துறையினர் கேட்டு 'லியோ' படக்குழுவினர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை எழுதிய கடிதத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடையும்? எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா ? பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல் துறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் லியோ வெற்றி விழாவில் 5000 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.