கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்... நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது `லியோ’ சிறப்பு காட்சி!

லியோ போஸ்டர்
லியோ போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், நாள் ஒன்றிற்கு கூடுதலாக ஒரு காட்சி என்ற அடிப்படையில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிகாலை 4 மணிக்கு படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்தது. மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தரமறுத்துவிட்டது. இதனையடுத்து காலை 7 மணிக்கு திரையிட அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கும் அரசு மறுப்பு தெரிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில், லியோ முதல் காட்சி இன்று இரவு 12.30 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று இரவு 12.30 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் கடைசி நேரம் வரை படம் எப்போது வெளியாகும் என்ற சர்ச்சை நீடித்து வந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகள் லியோ படத்திற்கான முன்பதிவு இல்லை என்றும், லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை என்றும் அறிவிப்புகள் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளனர். ஆனால், அகமதாபாத்தில் நள்ளிரவு காட்சி வெளியாவது தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in