ஓடிடியில் வெளியாகும் `லியோ’... எப்போது தெரியுமா?

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதை சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை படம் வசூலித்ததாகப் படக்குழு அறிவித்தது. மேலும், இதன் வெற்றி விழாவில் நடிகர் விஜய், ரஜினிக்குப் பதிலடியாக சொன்ன குட்டி கதையும் வைரலானது.

இந்த நிலையில், ‘லியோ’ படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 24ம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in