வைரல் வீடியோ... 'லியோ' முன்பதிவுக்கு கேரளா ரசிகர்கள் செய்த மாஸ் சம்பவம்!

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ்

'லியோ' படத்தின் முன்பதிவிற்காக கேரள ரசிகர்கள் செய்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை(அக்.19) வெளியாகவுள்ள நிலையில் அதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 'லியோ' படத்தின் முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

குறிப்பாக கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படமாக 'கேஜிஎப் 2' இருந்து வந்தது. அந்த சாதனையை 'லியோ' திரைப்படம் முன்பதிவு மூலமே முறியடித்துள்ளது.

'லியோ' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கேரளாவில் தொடங்கியதை அடுத்து கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்துள்ளனர். மேலும், தியேட்டரில் நடிகர் விஜய்க்கும் பிரம்மாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.

பைக்கில் ரசிகர்கள் ஊர்வலமாக வந்ததும், விஜய்க்கு கட் அவுட் வைத்துள்ளதும் கேரளாவில் விஜய்க்கு உள்ள மாஸை காட்டுகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in