
'லியோ' பட சிறப்பு காட்சி தொடர்பாக பட நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.
அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, ’லியோ’ படக்குழு தரப்பிலிருந்து 'அக்டோபர் 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.