'லியோ’ இசைவெளியீட்டு விழாவுக்கு புது சிக்கல்! மதுரை ரசிகர்களுக்கு ஜாக்பாட்!

’லியோ’ விஜய்
’லியோ’ விஜய்

’லியோ’ இசை வெளியீட்டு விழாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானால் புது சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இசை வெளியீடு நிகழ்ச்சி மலேசியாவில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது தமிழகத்தில் தான் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் உறுதி செய்துள்ளார். ஆனால் சென்னை, மதுரை, திருச்சி என எங்கு நடக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. சென்னையைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் தனது ரசிகர்களை வரவழைத்து பிரம்மாண்டமாக நடத்த விஜய் விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஹ்மான்
ரஹ்மான்

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவே நடக்காது என்ற ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தான் காரணம் என்கிறார்கள். ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதே ரசிகர்களுக்கும் போலீசுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய சில ரசிகர்கள், இசை வெளியீட்டு விழாவுக்கு செல்ல முடியாத சூழல் உருவானது.

எனவே, ரஹ்மான் நிகழ்ச்சி போல இந்த இசை வெளியீட்டு விழாவிலும் அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என்று படக்குழுவினர் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும், இசைவெளியீட்டு விழா மதுரையில் நடைப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in