மாஸ்... நெற்றியில் குங்குமம், விபூதியோடு மேடையில் என்ட்ரி கொடுத்த ஜோசப் விஜய்!

 மேடையில் விஜய்
மேடையில் விஜய்

'லியோ' வெற்றி விழாவிற்கு தற்பொழுது நடிகர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

'லியோ' படத்தின் வெற்றி விழா தற்பொழுது சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த முறை 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்களுக்கு இடையில் நடந்து வந்தது போலவே, இந்த முறையும் ரசிகர்கள் மத்தியில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதோடு, நெற்றியில் குங்குமம் விபூதியோடு விஜய் வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான் உள்ளிடோர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

அரசியல் எண்ட்ரி, 'லியோ' சர்ச்சைகள், ரஜினிக்கு பதிலடி கொடுக்க குட்டி ஸ்டோரி என விஜயின் லேச்சு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in