புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மரணம்

புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர்  மரணம்

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான இஸ்மாயில் ஷ்ராஃப் காலமானார். அவருக்கு வயது 62.

‘தோடி ஸி பேவஃபாயி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இஸ்மாயில் ஷ்ராஃப். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானததால் பாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இடம்பிடித்தார். இதன் பின் 'ஆஹிஸ்தா ஆஹிஸ்தா',' ஜித்’, அகர்',' காட் அண்ட் கன்', 'போலீஸ் பப்ளிக்', 'மஜ்தார்', 'தில் ஆகிர் தில் ஹை', 'புலந்தி', 'நிச்சய்', 'சூர்யா', ‘ஜூட்டா ஸச்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2004-ம் ஆண்டு 'தோடா தும் பத்லோ தோடா ஹம்' எனும் திரைப்படத்தை இஸ்மாயில் ஷ்ராஃப் இயக்கியிருந்தார். சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இஸ்மாயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

அவரது உடலுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் கோவிந்தா, பத்மினி கோலாபுரி, அசோக் பண்டிட் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in