`நான் நேரில் பார்த்த லெஜெண்ட் விஜய்'- இயக்குநர் மிஷ்கின்

`நான் நேரில் பார்த்த லெஜெண்ட் விஜய்'- இயக்குநர் மிஷ்கின்

"நான் நேரில் பார்த்துள்ள லெஜெண்ட் நடிகர் விஜய் மட்டும் தான்" என்று இயக்குநர் மிஷ்கின் புகழாரம் சூட்டினார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் லியோ' பட வெற்றி விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "என் வாழ்க்கையில் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் என இரண்டு லெஜெண்ட் பற்றி படித்துள்ளேன். ஆனால், நான் நேரில் பார்த்துள்ள லெஜெண்ட் நடிகர் விஜய் மட்டும் தான். என்னை நிகழ்வுக்கு 4 மணிக்கு வர சொன்னார்கள். நான் 4.30 மணிக்கு வந்தேன். ஆனால், விஜய் 2 மணிக்கே இங்கு வந்துவிட்டார். விஜய் நிஜத்திலும் ஹீரோதான். அவர் ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in