புது கெட்டப்பில் ‘லெஜெண்ட்’ சரவணன்: வைரலாகும் புகைப்படங்கள்!

‘லெஜண்ட்’ சரவணன்
‘லெஜண்ட்’ சரவணன்

’லெஜெண்ட்’ சரவணன் புதிய தோற்றத்தில் வலம் வரக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘லெஜண்ட்’ சரவணன்
‘லெஜண்ட்’ சரவணன்

ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் சரவணன். படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. இப்போது சரவணன் புது தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு அவரது அடுத்தப் படம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

‘லெஜண்ட்’ சரவணன்
‘லெஜண்ட்’ சரவணன்

சமீபத்தில் அவர் காஷ்மீரில் இருக்கும்படியான புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதன் மூலம் அவர் அடுத்து படத்தில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார் என்பதும் தெரிகிறது. இப்போது புது கெட்டப்பிற்கு மாறியுள்ளதால், சரவணனின் அடுத்தப் படம் என்ன, யார் இயக்குகிறார்கள் என்பது குறித்தான விவரம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in