`அரசியல் கட்சிகள் மிரட்டினால் சட்ட நடவடிக்கை'- நடிகர் சங்கம் அதிரடி

`அரசியல் கட்சிகள் மிரட்டினால் சட்ட நடவடிக்கை'- நடிகர் சங்கம் அதிரடி

``அரசியல் கட்சிகள் மூலம் வரும் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அதிரடியாக கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3 வருடத்துக்கு பின் கடந்த 20-ம் எண்ணப்பட்டது. இதில், தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் 24 பேர் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதனிடையே, நடிகர் சங்க நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிலையில், நடிகர் சங்கச் செயற்குழு கூட்டம் நாசர் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் பின்னர் பேசிய பொதுச் செயலாளர் விஷால், "நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய பிறகு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பேசுகையில், "தணிக்கை குழு சான்று பெற்ற திரைப்படங்களுக்கு, அரசியல் கட்சிகள் மூலம் வரும் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நடிகர்களுக்கும் உதவுவோம்" என்று அதிரடியாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in