`அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம்': காளி சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை விளக்கம்

`அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம்': காளி சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை விளக்கம்

’காளி’ பட போஸ்டர் சர்ச்சையை அடுத்து கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார்.

கவிஞர் லீனா மணிமேகலை, ஆவணப்படங்களையும் இயக்கி வருகிறார். இவர் இயக்கிய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற படங்கள் பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. இதற்காக சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் 'காளி' என்ற நிகழ்த்துகலை ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அவரே ’காளி’யாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில் 'காளி' வேடம் அணிந்த பெண் ஒருவர், புகைப்பிடித்துக்கொண்டு எல்ஜிபிடி (LGBT) கொடியை கையில் பிடித்திருக்கிறார்.

இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இது, இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதையடுத்து ட்விட்டரில், '#ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. இந்நிலையில் வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், லீலா மணிமேகலை மீது டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார். அதில், ’‘ஒரு மாலைப்பொழுது, டொரண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in