கசிந்தது நடிகர் விஜயின் 'தளபதி 66’ ஸ்டில்கள்: படக்குழு எடுத்த திடீர் முடிவு!

கசிந்தது நடிகர் விஜயின் 'தளபதி 66’ ஸ்டில்கள்: படக்குழு எடுத்த திடீர் முடிவு!

'தளபதி 66' படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜயின் புகைப்படங்கள் வெளியானதால் படப்பிடிப்பு தளத்தை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். 'தோழா' படத்தை இயக்கிய வம்சி இந்த படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்குகிறார். தில் ராஜூ படத்தை தயாரிக்கிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, நடிகர் விஜயின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது.

அங்கிருந்து தான் நடிகர் விஜயின் சில புகைப்படங்கள் வெளியாகி படத்தில் அவரது தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இதனால் அப்செட்டில் இருந்த படக்குழு படப்பிடிப்பு தளத்தை வேறு இடத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். முன்பு படப்பிடிப்பு தளத்திற்கான செட் சென்னையில் உள்ள ஈசிஆர் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து இணையத்தில் நடிகர் விஜயின் புகைப்படங்கள் வெளியானதால் இதற்கு தீர்வு காணும்படி ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்தனர்.

இதன் காரணமாக, ஈசிஆர் பகுதியில் இருந்தது போலவே, வேறு பகுதியில் செட் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், படப்பிடிப்பு சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செட் பணிகள் முழுவதும் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. விஜயின் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது படக்குழுவினரின் வேலையை தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது.


இந்த படத்தில் முதன் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தானா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தமனும் முதல் முறையாக இசையமைக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் 22-ம் தேதி வர இருப்பதால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in